
பாடசாலை மாணவர்களின் வரவு தொடர்பில் வெளியான தகவல்
2021 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலைகள் இன்று ஆரம்பமாகி இருந்தன.
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு இருந்தன.
அதனடிப்படையில் பாடசாலையின் முதலாம் நாளான இன்று மாணவர்களின் வருகை 51 சதவீதமாகவும் ஆசிரியர்களின் வருகை 88 சதவீதமாகவும் பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வவுனியாவில் பாடசாலைகளும் கிழக்கில் சில பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.