
கொவிட்-19 இரண்டாம் அலையில் கொழும்பு மாவட்டத்தின் தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்தது!
கொவிட்-19 இரண்டாம் அலையில் கொழும்பு மாவட்டத்தில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்தை அண்மித்துள்ளது.
நாட்டில் நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியான 543 பேரில் பெருமாளவானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக கொவிட்-19 கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 217 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதன்படி, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் கொவிட்-19 இரண்டாம் அலையில் கொழும்பு மாவட்டத்தில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துளளது.
இதேநேரம், கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம் 85 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 40 பேரும், காலி மாவட்டத்தில் 26 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் 13 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 10 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 பேரும், களுத்துறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தலா 8 பேரும், குருநாகல், மாத்தறை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தலா 6 பேரும் பதிவாகியுள்ளனர்.
பொலனறுவை மாவட்டத்தில் 5 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 4 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 03 பேரும், கேகாலை மாவட்டத்தில் 2 பேரும், அநுராதபுரம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா ஒவ்வொருவரும் பதிவாகியுள்ளதாக கொவிட்-19 கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது