நாடாளுமன்ற கூட்ட அமர்வுகள் குறித்து நாளை மறு தினம் கட்சித் தலைவர்களின் ஒன்றுகூடல்!

நாடாளுமன்ற கூட்ட அமர்வுகள் குறித்து நாளை மறு தினம் கட்சித் தலைவர்களின் ஒன்றுகூடல்!

வரும் வாரங்களில் நாடாளுமன்ற கூட்டங்கள் நடத்துவது தொடர்பில் தீர்மானம் எடுப்பது குறித்து நாளை மறு தினம் கட்சித் தலைவர்களின் ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையால் வரும் வாரங்களில் கூட்டங்கள் நடத்துவது குறித்து கலந்தாலோசிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொலைத்தொடர்பு திணைக்களம் தொிவித்துள்ளது.

எவ்வாறெனினும் நாடாளுமன்ற கூட்ட அமர்வுகளுக்கு இதுவொரு தடையாக இருக்க மாட்டாது என நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்த்ர பெர்ணான்டோ தொிவித்துள்ளார்.

தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.