
அரசியல் கட்சி - தேர்தல் ஆணைக்குழுவுக்கிடையிலான விசேட கலந்துரையாடல்...!
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையிலான விசேட கலந்துரையாடலொன்று தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த கலந்துரையாடல் ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றது.
காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கலந்துரையாடலின் போது அரசியல் கட்சிகளுக்கு தேவையான பல முக்கியமான விடயங்கள் குறித்து கவனம் செலுத்துவதாக தேர்தல் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய வாக்காளர் பெயர் பட்டியலில் திருத்தம் செய்வதற்காக இங்கு விசேட கவனம் செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் வருடாந்த கணக்கு அறிக்கை தொடர்பாகவும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காகவும் இந்த கலந்துரையாடல் நடைபெறுவதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.