இணையத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வந்த இரகசிய விபசார விடுதி காவல் துறையினரால் சுற்றிவளைப்பு! (காணொளி)

இணையத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வந்த இரகசிய விபசார விடுதி காவல் துறையினரால் சுற்றிவளைப்பு! (காணொளி)

இணையத்தளத்தைப் பயன்படுத்தி விளம்பரங்களை மேற்கொண்டு மிக சூட்சுமமான முறையில் நடத்திச் சென்ற விபசார விடுதியொன்று கல்கிசை பிரதேசத்தில் நேற்று கல்கிசை காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டது.

இணையத்தில் பிரசுாிக்கப்பட்டிருந்த விளம்பரங்களையடுத்து முகவர் ஒருவரை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது இது தொடர்பில் சந்தேகத்தின் போில் மேலும் 9 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

மேற்படி கைதாகிய பெண்கள் 25, 28, 32 வயதுடையவர்கள் என்பதோடு இவர்கள் வெலிமடை, பண்டாரகம, மாத்தறை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்கள் தொழில் நிமித்தம் கொழும்பிற்கு செல்வதாக தங்கள் வீடுகளில் கூறி விட்டு இத்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

ஐயாயிரத்திற்குமதிகமான விலைக்கோரலுக்கு விலைபோகும் இவர்கள் நீண்ட காலமாக இத்தொழிலை மேற்கொண்டு வந்துள்ளனர் என காவல் துறையினர் தொிவிக்கின்றனர்.

மேற்படி சந்தேகத்தின் போில் கைதான பெண்கள் இன்று (11) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.