இருளில் மூழ்கியது பாகிஸ்தான் -மக்கள் பெரும் அவதி

இருளில் மூழ்கியது பாகிஸ்தான் -மக்கள் பெரும் அவதி

பாகிஸ்தானில் திடீரென ஏற்பட்ட மின்தடையால் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கியதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பாகிஸ்தானில் நேற்று இரவு திடீரென பெரிய அளவில் மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின. பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களான இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர், முல்தான் உள்பட பல நகரங்கள் நள்ளிரவில் இருளில் மூழ்கின.

மின்தடைக்கான காரணம் குறித்து பாகிஸ்தான் எரிசக்தி துறை அமைச்சர் ஒமர் ஆயுப் டுவிட்டரில் பதிவிட்டார். அதில், தேசிய மின் விநியோக அமைப்பின் அதிர்வெண்கள் 50-ல் இருந்து திடீரென 0-க்கு சென்றதே மின்விநியோகம் தடைப்பட்டதற்கு காரணம் ஆகும்.

அதிர்வெண்கள் திடீரென சரிந்தது எதனால் என விசாரணை நடக்கிறது. மின் விநியோகத்தை வழங்குவதற்கான மாற்று முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். மக்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Pakistan has been hit by nationwide blackout