பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான் கதவுகளும் திறப்பு! (படங்கள் இணைப்பு)

பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான் கதவுகளும் திறப்பு! (படங்கள் இணைப்பு)

3 வருடங்களின் பின் பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான் கதவுகளையும் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பொலனறுவை மாவட்டத்தின் அதிக மழை வீழ்ச்சி காரணமாக பராக்கிரம சமுத்திரத்தின் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் அதிகாித்து வருவதால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 10 வான் கதவுகளில் 8 வான் கதவுகள் 1 அடி அளவிலும் மற்றைய இரு வான் கதவுகளும் 2 அடி அளவிலும் திறக்கப்பட்டுள்ளன.

மேற்படி வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணத்தால் தாழ் நில பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென பொலனறுவை வலய நீர்ப்பாசன அதிகாாிகள் தொிவித்துள்ளனர்.

இதேவேளை பொலனறுவை - மட்டக்களப்பு வீதியின் கல்லேல்ல பிரதேசம் 1 அடி அளவிற்கு நீாில் மூழ்கி இருப்பதாக பொலனறுவை மாவட்ட இடர் முகாமைத்துவ அதிகாாிகள் தொிவித்துள்ளனர்.