சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பம்..!

சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பம்..!

எதிர்வரும் நாட்களில் யுக்ரைன் நாட்டவர்கள் மாத்திரமின்றி ஏனைய நாட்டு சுற்றுலா பயணிகளையும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பலாங்கொடையில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

எமக்கு தொடர்ந்து நாட்டை மூடி வைத்திருக்க முடியாது

நாட்டின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைய விடமுடியாது.

எனவே, தற்போது காணப்படும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து எதிர்வரும் நாட்களில் சகல நாட்டினது சுற்றலா பயணிகளையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யுக்ரைகன் முடக்கப்பட்டுள்ள நிலையில் திட்டங்கள் இன்றி அங்கிருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

உரிய செயற்திட்டங்களுக்கு அமையவே வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.