கடந்த ஆண்டு மதுவரி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 146 மில்லியன் ரூபா அபராதம் அறவீடு!
கடந்த வருடம் மதுவரி திணைக்களம் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 146 மில்லியன் ரூபா அபராதம் அறவிடப்பட்டுள்ளது.
39, 624 சுற்றிவளைப்புகளிலேயே இந்த அபராத தொகை அறவிடப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் கபில குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் குறித்த சுற்றிவளைப்புகளின் ஊடாக வழக்கு தாக்கல் செய்வதற்காக திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதியானது 460 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமானது என அவர் தெரிவித்துள்ளார்.
திணைக்களம் கைப்பற்றிய பொருட்களில் 200 கிலோகிராம் போதைப்பொருளும் அடங்குகின்றன.
இந்த சுற்றிவளைப்புக்களின் ஊடாக 39 ஆயிரத்து 586 பேர் கைது செய்யப்பட்டதோடு, அவர்களில் 4059 பெண்களும் அடங்குவதாக மதுவரி திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் கபிலகுமாரசிங்க தெரிவித்துள்ளார்.