மதுவரி திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட 39,624 சுற்றிவளைப்புகள்..!
2020ஆம் ஆண்டு முழுவதும் இலங்கை மதுவரித்திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட 39,624 சுற்றிவளைப்புகளின் போது 146 மில்லியன் ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுவரித்திணைக்கள ஊடக பேச்சாளர் கபில குமாரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த அதிகாரிகளால் 460 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இவற்றுள் 200 கிலோ கிராம் போதைப்பொருட்கள் என மதுவரித்திணைக்கள ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்