தயாசிறி ஜயசேகரவின் அலுவலகத்திற்கு தொற்று நீக்கும் பணிகள் செய்யப்பட்டன

தயாசிறி ஜயசேகரவின் அலுவலகத்திற்கு தொற்று நீக்கும் பணிகள் செய்யப்பட்டன

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகரவுக்கு கொவிட் 19 தொற்றுறுறுதியானதை அடுத்து அவருடன் நெருங்கிய தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அவர்களில் ராஜாங்க அமைச்சரின் குடும்ப உறுப்பினர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அவரது அலுவலகத்திற்கு தொற்று நீக்கும் பணிகள் செய்யப்பட்டன.

புத்தாண்டு தினமான கடந்த முதலாம் திகதி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தயாசிறி ஜயசேகர கலந்துக்கொண்டிருந்தார்.

அந்த நிகழ்வில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட குழுவினரும் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், கடந்த இரண்டு தினங்கள் நாடாளுமன்ற அமர்விற்கும் அவர் வருகைத்தரவில்லை என்பதுடன், ஆளும் கட்சி கூட்டத்திலும் அவர் கலந்துக்கொண்டிருக்கவில்லை