உக்ரைனை உலுக்கிய கொரோனா தொற்று...! அரசாங்கம் மேற்கொண்ட அதிரடி தீர்மானம்

உக்ரைனை உலுக்கிய கொரோனா தொற்று...! அரசாங்கம் மேற்கொண்ட அதிரடி தீர்மானம்

கொரோனா அச்சம் அதிகரித்து வருவதன் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 24ஆமு் திகதி வரை நாடளாவிய ரீதியில் உக்ரைன் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் முதல் உக்ரைனில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கமையவே இவ்வாறு நாடு முழுவதும் முடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.