நெல் உற்பத்தியாளர்களுக்கு பிரதமரிடம் இருந்து ஓர் மகிழ்ச்சிகர செய்தி..!!

நெல் உற்பத்தியாளர்களுக்கு பிரதமரிடம் இருந்து ஓர் மகிழ்ச்சிகர செய்தி..!!

சிறிய மற்றும் நடுத்தர அளவில் நெல் உற்பத்தி செய்பவர்களுக்கு கடன் வசதிகளை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பெரியளவில் நெல் உற்பத்தி செய்பவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்னர் சிறிய மற்றும் நடுத்தர நெல் உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என பிரதமர் இதன் போது சுட்டிகாட்டியுள்ளார்