பயன்படுத்திய முகக்கவசங்களை உரிய முறையில் அப்புறப்படுத்துமாறு கோரிக்கை
மக்கள் பயன்படுத்திய முகக்கவசங்களை உரிய முறையில் அகற்றுமாறு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
கவனயீனமாக சூழலில் போடப்பட்ட சுமார் 150 கோடியளவு முகக்கவசங்கள் தற்போது கடலில் சேர்ந்துள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் பேராசிரியர் டர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையைச் சூழவுள்ள கடற்கரையை பாதுகாப்பதற்காக இந்நாட்டு மக்களுக்கு இருக்கின்ற கடமையை பொறுப்புடன் செயற்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.