மாசடைந்து வரும் நிலக்கீழ் நீர்..!! சுத்தம் செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்

மாசடைந்து வரும் நிலக்கீழ் நீர்..!! சுத்தம் செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்

நாட்டில் உள்ள நகர் பகுதிகளில் கழிவுநீர் மற்றும் குப்பைகூளங்கள் அதிகளவில் நீருடன் சேர்வதனால், நிலத்தடி நீர் மாசடைந்து வருவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இவ்வாறு நீர் மாசுபடுவதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை விரைவில் கண்டறிய வேண்டும் எனவும் அவ்வாறு கண்டறியாத சந்தர்ப்பத்தில், நாட்டில் குடிநீருக்கான பிரச்சினை ஏற்படக்கூடும் எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

நிலத்துடன் சேரும் கழிவுகளில் 90 வீதமானவை நீரில் சேர்வதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் காலங்களில் வீடுகள், மண்டபங்கள்,உணவகங்களில் முறையான கழிவகற்றல் திட்டம் ஒன்றை அனைவரும் முன்னெடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.