மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் இன்று மாலை வேளையில் இடியுடன் கூடிய மழைபெய்யக்கூடும்.

அத்துடன் இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் காற்று அதிகரித்து வீசும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது