மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் மருத்துவ பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!
தம்புள்ளை நகரில் காணப்படுகின்ற விடுதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இரத்தினக்கல் வர்த்தகருக்கு கொரோனா வைரஸ் தொற்று காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தம்புள்ளை காவல் துறையினர், தம்புள்ளை மாநகர சபை உறுப்பினர்கள், மற்றும் விடுதியின் உரிமையாளர்கள் என அனைவரும் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 வயதுடைய குறித்த நபர் தொற்றினால் உயிரிழந்துள்ளாரா அல்லது தற்கொலை செய்துக்கொண்டுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன