கண்டி-பூவெலிகட பகுதியில் 05 மாடி கட்டிடம் தாழிறங்கியமைக்கான காரணம் வெளியானது..!

கண்டி-பூவெலிகட பகுதியில் 05 மாடி கட்டிடம் தாழிறங்கியமைக்கான காரணம் வெளியானது..!

கண்டி-பூவெலிகட பகுதியில் 05 மாடி கட்டிடம் ஒன்று தாழிறங்கியமைக்கு இயற்கை சீற்றங்களோ அல்லது  புவிச்சரிதவியல் விடயங்களோ காரணமாக அமையாது என குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த கட்டிடத்தை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களின் தரமின்மையும் கட்டுமான பணிகளின் போது இழைக்கப்பட்டுள்ள தவறுகளுமே இவ்வாறு கட்டிடம் தாழிறங்குவதற்கு காரணம் எனவும் அந்த குழு மேலும் குறிப்பிட்டுள்ளது