இங்கிலாந்து கிரிக்கட் அணியின் பயிற்சி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன..!

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் பயிற்சி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன..!

இலங்கை வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கட் அணியின் பயிற்சி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அணியின் வீரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பெறுபேறுகள் இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில், இந்தநிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று அவர்கள் பயிற்சிகளை ஆரம்பிக்கவிருந்த போதும், அவர்கள் தொடர்ந்தும் விருந்தக அறைகளிலேயே தங்கவைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி இங்கிலாந்தில் இருந்து புறப்படும் போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்று இருக்கவில்லை என்று கூறப்படுகிறது.

எனினும் இலங்கையில் வைத்து அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் மொயின் அலிக்கு தொற்றிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து அணியின் அனைவருக்கும் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாளையதினம் மற்றுமொரு பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.