தப்பிச்சென்றவர் பயணித்த பேருந்துகள் தொடர்பான விபரங்கள் இதோ..!

தப்பிச்சென்றவர் பயணித்த பேருந்துகள் தொடர்பான விபரங்கள் இதோ..!

கடந்த 31 ஆம் திகதி பொலன்னறுவை - வெலிகந்த - கல்லேல்ல சிகிச்சை நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற கொவிட் 19 தொற்றுறுதியான 5 கைதிகளில் மேலும் ஒரு கைதி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரச்சிகட்டுவ – ஆனவிலுந்தாவ பகுதியில் வைத்து 52 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவரை தங்கவைப்பதற்காக உதவிகளை வழங்கிய ஒருவரும் கைது செய்ய்பபட்டுள்ளதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தப்பிச்சென்று பயணித்த பகுதிகள் தொடர்பில் பேருந்துகள் தொடர்பிலும் விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய குருநாகலை, நாராம்மலை, குளியாப்பிட்டி, வெலிப்பன்ன, மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்தில் பயணித்துள்ளார் என விசாரணைகளில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதற்கு முன்னர் தப்பிச் சென்ற கைதிகளில் ஒருவர் மாதம்பே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய மூன்று பேரை தேடி தொடர்ந்தும் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.