ஒன்பது மணிநேர தீவிர விசாரணையில்! உண்மையை உடைத்த சுஷாந்தின் காதலி! இவ்வளவு மர்மங்கள் மறைந்துள்ளதா?

ஒன்பது மணிநேர தீவிர விசாரணையில்! உண்மையை உடைத்த சுஷாந்தின் காதலி! இவ்வளவு மர்மங்கள் மறைந்துள்ளதா?

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு பிறகு இணையத்தளங்களில் பல விதமான தகவல்கள் வைரலாகி கொண்டிருக்கிறது.

அந்த வரிசையில் தற்போது, பயங்கரமாக ட்ரெண்டாகி கொண்டிருக்கும் ஒரு விஷயம் என்றால், அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் தங்கியிருந்த வீட்டின் காம்ப்ளைக்ஸ் சிசிடிவி காமெராவை ஆப் செய்துள்ளார்கள் என தகவல் வெளியாகி வருகிறது.

மேலும், அன்று இரவு சுஷாந்தின் நண்பர்கள் வீட்டிற்கு வந்து, மிகவும் சத்ததுடன் பாடல் வெளியே கேட்டு கொண்டாடியதாக பக்கத்து வீட்டுகாரர்கள் கூறியுள்ளார்கள். அவர் ரொம்ப சந்தோஷத்துடன் அன்று இருந்தார் எனவும் தெரிவித்துள்ளார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ஒரு ரிப்போர்டில் சுஷாந்தின் அவர்களின் பெட்ஷீட்டில் அவருடைய கைரேகை பதியவில்லையாம். இருந்தாலும் இடதுகை உடைய கட்டை விரல், மற்றும் சுண்டு விரல் மட்டும் ஒரு பெட்ஷீட்டில் பதிந்து இருந்ததாம்.

இந்த ஒரு விஷயம் தான் மிகவும் சந்தேகம் ஏற்படுத்துவதாக கூறுகிறார்கள். ஏனென்றால் சுஷாந்த் இடது கை பழக்கம் உடையவர் கிடையாதாம். இதோடு சுஷாந்த் சிங்கின் வீட்டின் டூப்ளிகேட் சாவியும் தொலைந்துவிட்டதாக ஒரு தகவல் கிடைத்திருக்காம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அடுத்ததாக பேசப்படும் ஒரு முக்கிய விஷயம், சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலியான ரியா தற்போது மகேஷ் பட்டுடன் தொடர்பில் இருக்கிறாராம்.

சுஷாந்த் சிங் இறந்த அப்போ, ரியா அவர்கள் ஆன்லைனில் தான் இருந்துள்ளாராம். அந்த நேரத்துல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பர்சனல் புகைப்படத்தை எல்லாம் நீக்கிவிட்டு, கமெண்ட்ஸ் பாக்ஸ் எல்லாம் ஆப் செய்துள்ளாராம்.

இந்த மாறி விஷயங்கள் எல்லாம் பரவிகொண்டிருப்பதால் சுஷாந்த் சிங்கின் மரணம் கொலையா? தற்கொலையா? என ஒரு கேள்வி எழும்பிகொண்டிருக்கிறது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அவரது நெருங்கிய தோழியான ரோகினி ஐயரிடம் நேற்று காலை விசாரணை நடைபெற்றுள்ளது.

விசாரணையில் ரோகினியின் வாக்குமூலம் குறித்து போலீசார் தகவல் எதுவும் வெளியிடவில்லை.

முன்னதாக ரோகினி ஐயர், சுஷாந்த் சிங் மரணம் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் நீள பதிவு ஒன்றை இட்டுள்ளார். ‘இதை நான் சொல்ல வேண்டும். என்னுடைய சிறந்த நண்பர் இப்போது இல்லை.

அதை ஏற்றுக்கொள்ள இன்னும் என்னால் முடியவில்லை. முதலில் சுஷாந்த் தன்னுடைய புகழ் மற்றும் தன்னை குறித்த மற்றவர்களின் கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

அதே போல தனக்கு நெருக்கமானவர்கள் தவிர மற்றவர்கள் எழுதும் பதிவையும் அவர் கண்டு கொள்வதில்லை.

போலி நண்பர்கள், சிறிய போன் கால்கள் எல்லாம் அவருக்கு பிடிக்காது. மற்றவர்களை போல பார்ட்டி எதுவும் சுஷாந்த்துக்கு தேவைப்படவில்லை.

அவருக்கென தனி ராஜ்யத்தை அமைத்துக் கொண்டார். சினிமாத்துறை என்பது அவரது வாழ்வில் ஒரு சிறிய பங்கு தான். அத்தனை தாண்டி அவரது உலகத்தில் இன்னும் பெரும்பகுதி உள்ளது.

அவர் விருதுகள் பற்றி கவலைப்பட்டதில்லை. அதே போல 100 கோடி படம் கொடுக்க வேண்டும் எனவும் ஆசைப்பட்டதில்லை. அவர் தொண்டு நிறுவனங்களில், அறிவியல் திட்டங்கள் மற்றும் உங்கள் புரிதலுக்கு அப்பாற்பட்ட புதுமைகளில் முதலீடு செய்தார்.

எனவே தயவுசெய்து அவரைப் புரிந்துகொள்ள முயற்சிக்காதீர்கள் அல்லது உங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு சேவை செய்ய அவரது திறமையைக் குறைக்க வேண்டாம்’ என குறிப்பிட்டுள்ளார்.

அதே போல இன்னொரு பதிவில், ‘நீங்கள் அவரைக் கொண்டாட விரும்பினால் அவரது வாழ்க்கையை கொண்டாடுங்கள். அவர் வைரம் போன்றவர். அவர் அக்கறை கொண்ட மூன்று நண்பர்களில் நானும் ஒருவர் என்பதில் எப்போது நான் நன்றிக்கடன் பட்டிருப்பேன். அவரை பற்றி யாருக்கும் சரியாக தெரியவில்லை’ என்பது உட்பட இன்னும் நீள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.