
முகக்கவசம் அணியாதவர்களிடம் கொரோனா தொற்று...! எச்சரிக்கை...!
முகம்கவசம் அணியாமை உள்ளிட்ட சுகாதார விதிகளை மீறி செயற்படுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களுக்கு பீசீஆர் அல்லது என்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இதன்படி நேற்றையதினம் 1060 பேர் இந்த குற்றச்சாட்டின் கீழ் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவர்களில் 550 பேரின் ரெபிட் அன்டிஜன் முடிவுகளின் படி 14 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டது.
இன்னும் 510 பேரின் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளதாக என காவற்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்