கொரோனா மரணங்களின் இறுதிக்கிாியைகள் தொடர்பான முடிவு சட்ட வைத்திய அதிகாாியின் பாிந்துரைகளுக்கமைய பெற்றுக் கொடுக்கப்படும்!

கொரோனா மரணங்களின் இறுதிக்கிாியைகள் தொடர்பான முடிவு சட்ட வைத்திய அதிகாாியின் பாிந்துரைகளுக்கமைய பெற்றுக் கொடுக்கப்படும்!

கொரோனா மரணங்களின் இறுதிக்கிாியைகள் தொடர்பான இறுதி முடிவு பேராசிாியர் ஜெனிபர் பெரேராவின் குழு அறிக்கையை சட்ட வைத்திய அதிகாாி சன்ன பெரேராவின் தலைமையிலான குழுவொன்றிற்கு சமர்ப்பித்ததன் பின் அவர்களால் மேற்கொள்ளப்படும் பாிந்துரைகளுக்கமைய பெற்றுக் கொடுக்கப்படுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தொிவித்துள்ளார்.

இதேவேளை இஸ்லாமிய மத அனுட்டானங்களுக்கு மாியாதை செலுத்தி கொவிட் தொற்றினால் மாிக்கும் முஸ்லிம்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேன ஹிந்து பத்திாிகைக்கு வழங்கிய செவ்வியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.