நேற்று தொற்றுறுதியானவர்களில் அதிகமானோர் கொழும்பில் பதிவு!

நேற்று தொற்றுறுதியானவர்களில் அதிகமானோர் கொழும்பில் பதிவு!

நாட்டில் நேற்றைய தினம் தொற்றுறுதியான 403 பேரில் 81 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் கொவிட் 19 இரண்டாம் அலையில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்புக்கு அடுத்தப்படியாக நேற்றைய தினம் கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான கொவிட் 19 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் நேற்றைய தினம் 56 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 30 பேருக்கும் களுத்துறை மாவட்டத்தில் 27 பேருக்கும், திருகோணமலை மாவட்டத்தில் 20 பேருக்கும் அம்பாறை மற்றும் கேகாலை மாவட்டங்களில் தலா 17 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 14 பேருக்கும் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.