வவுனியாவில் இன்று இடம்பெற்ற அனர்த்தம் - தப்பிச் சென்ற இளைஞரை பிடித்த பொலிஸார்

வவுனியாவில் இன்று இடம்பெற்ற அனர்த்தம் - தப்பிச் சென்ற இளைஞரை பிடித்த பொலிஸார்

வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி விபத்தினை ஏற்ப்படுத்திய இளைஞரை வவுனியா போக்குவரத்து பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையி்ல் வவுனியா நகர்பகுதியில் இருந்து கோவில்குளம் நோக்கி பயணித்த இலகுரகவாகனம் கொறவப்பொத்தானை வீதியால் திரும்ப முற்பட்டபோது பின்னால் வந்துகொண்டிருந்த மோட்டார்சைக்கிள் வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் தூக்கி வீசப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிளை அந்த பகுதியிலேயே விட்டுவிட்டு தலைமறைவாகியிருந்தார். எனினும் பொலிசாரால் அவர் கைதுசெய்யப்பட்டார். அவர் மதுபோதையில் இருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

  • IMG dfbcc973059626f93c8a0ac3c98b237a V 1

  • IMG fbd1d4482d90b9b8b52b0f0bf47de00a V

  • IMG 4db2772d2232b2ff282c2f4cde06e4bd V 1