சற்று முன்னர் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்..!

சற்று முன்னர் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்..!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் சில பகுதிகள் இன்று அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரால் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி கொழும்பு - முகத்துவாரம் காவற்துறை அதிகார பிரிவு, வாழைத்தோட்டம் காவற்துறை அதிகார பிரிவின் வாழைத்தோட்டம் மேற்கு மற்றும் கிழக்கு கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பொரளை காவற்துறை அதிகார பிரிவின் வனாத்தமுல்ல கிராம சேவகர் பிரிவு, மிரிஹான காவற்துறை அதிகார பிரிவின் தமிழ்நாடு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தின் பேலியகொடை காவற்துறை அதிகார பிரிவின் பேலியகொடவத்த, மீகஹவத்த கிராம சேவகர் பிரிவுகளும், ரோஹன விஹார மாவத்தை, நெல்லிகஹவத்த, பூரணகொட்டுவத்தை, என்பனவும் இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கிரிபத்கொடை - விலேகொட வடக்கு கிராம சேவகர் பிரிவின் சிறி ஜயந்தி மாவத்தையும் விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரால் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.