வானத்தவில்லு-ராலமடுவ வயல் நிலப்பகுதியில் பகுதியில் பறவைகள் உயிரிழந்தமைக்கு இதுவா காரணம்..?
வில்பத்து தேசிய சரணாலயத்திற்கு அருகில் உள்ள வனாத்தவில்லு - ராலமடுவ வயல் நிலப்பகுதியில் பறவைகள் உயிரிழந்தமைக்கு, அவற்றின் உடலில் விஷம் ஏறியமையே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த திணைக்களத்தின விலங்கு வைத்தியர் இசுரு கோட்டேகொட, எமது செய்திச்சேவை வினவியபோது இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அதன் மாதிரிகள் சில ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த பறவைகளின் உடல் பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் குறித்த பறவைகளுக்கு பறவைக்காய்ச்சல் ஏற்பட்டிருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
வனாத்தவில்லு - ராலமடுவ வயல் நிலப்பகுதியில் சுமார் 150 பறவைகள் கடந்த வாரத்தில் உயிரிழந்திருந்தன.