இலங்கை வரும் இங்கிலாந்து அணி...!
இங்கிலாந்து டெஸ்ட் குழாமினருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் எவருக்கும் கொவிட்19 தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இன்றைய தினம் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இலங்கை அணி தென்னாப்பிரிக்காவுக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகின்றது.
இந்த நிலையில் காயம் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணியின் சுரங்க லக்மால், கசுன் ராஜித்த, லஹிரு குமார, தினேஷ் சந்திமால் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த தனஞ்சயடி சில்வாவும் இன்னும் குணமடையவில்லை.
இவ்வாறு இலங்கை அணியில் பல வீரர்கள் தற்போது காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் இங்கிலாந்துக்கு எதிராக எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பமாகும் டெஸ்ட் தொடரில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.