காவற்துறையினர் பொது மக்களிடம் விடுத்துள்ள விசேட கோரிக்கை...!!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளர்கள் குறித்த தகவலை காவற்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
பொலன்னறுவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 05 கொரோனா தொற்றாளர்கள் கடந்த 05ஆம் திகதி தப்பிச்சென்றிருந்தனர்.
அவர்களில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.
ஏனைய 04 பேரையும் தேடும் பணிகள் தொடர்வதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அவர்களை எங்காவது கண்டால் 119 என்ற இலக்கத்திற்கு அழைத்து தகவல் தெரிவிக்குமாறு காவற்துறை பொது மக்களிடம் கோரியுள்ளது.