நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று குறித்த முழுமையான தகவல்..!

நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று குறித்த முழுமையான தகவல்..!

பேலியகொட புதிய மெனிங் சந்தையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில் 7 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

குறித்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் இதனை எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.

கடந்த 30 ஆம் திகதி குறித்த சந்தையில் வர்த்தகர்கள் மற்றும் சேவையாளர்கள் உள்ளிட்ட 120 பேருக்கு எழுமாறாக பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்களில் ஏழு பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் தொற்றுறுதியான 7 பேரும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 557 கொரோனா நோயாளர்களில் பெருமளவானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

192 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 127 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 61 பேரும், காலி மாவட்டத்தில் 38 பேரும் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 29 பேரும், மட்டக்களப்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களில் தலா 17 பேரும், கண்டி மாவட்டத்தில் 16 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 14 பேரும், நுவரெலியாவில் 11 பேரும் பதிவாகினர்.

புத்தளம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் தலா 8 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 5 பேரும், கேகாலை மாவட்டத்தில் 4 பேரும் கண்டறியப்பட்டனர்.

மாத்தளை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தலா 2 பேரும், அம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் தலா ஒவ்வொருவரும் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளியில் 35 பேரும், நாரஹேன்பிட்டியில் 26 பேரும், அவிசாவளையில் 18 பேரும், தெமட்டகொடை 13 பேரும், அடையாளம் காணப்பட்டுள்ளன

கிராண்ட்பாஸில் 5 பேரும், மருதானை மற்றும் பொரளையில் 4 பேரும், ப்ளூமெண்டலில் 3 பேரும், கொம்பனித்தெரு, கொள்ளுப்பிட்டி, கிருலப்பனை முதலான பகுதிகளில் தலா 2 பேரும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.