நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு!
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிலவேளைகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று காலை வெளியிடப்பட்டுள்ள வானிலை நிலவர அறிக்கையில் இந்த விடயம் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும், 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில், காற்று மற்றும் இடிமின்னல் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.