உள்நாட்டுப் பால் உற்பத்தி இவ்வாண்டில் அதிகாிக்கப்படும்!

உள்நாட்டுப் பால் உற்பத்தி இவ்வாண்டில் அதிகாிக்கப்படும்!

உள்நாட்டுப் பால் உற்பத்தி இந்த ஆண்டில் 70 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என தேசிய கால்நடை வள அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

தற்போது வரை உள்நாட்டு பால் உற்பத்தியானது பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இல்லை என அந்த சபையின் தலைவர் மஞ்சுள மாகமகே தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே வெளிநாடுகளில் அதிகளவிலான பால்மா பொதிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இதற்காக அதிகளவிலான அந்நிய செலாவணி செலவிடப்படுகின்றன.

எனவே, உள்நாட்டு பால் உற்பத்தியினை இந்த வருடத்தில் 70 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்துடன், மாறுபட்ட சுற்றாடல் நிலைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய கால்நடைகளை இனப்பெருக்கம் செய்வது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்திச் சபையின் தலைவர் மஞ்சுள மாகமகே தெரிவித்துள்ளார்.