கடந்த 24 மணித்தியாலங்களில் ஏற்பட்ட வாகன விபத்துக்களில் 12 பேர் உயிாிழப்பு!
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 12 பேர் பலியாகினர்.
காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் அந்த காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 40 பேர் காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
அவர்களில் 6 பேர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 10 நாட்களில் நேற்றைய தினமே வீதி விபத்துக்களில் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர்.
கொவிட்-19 தொற்றுக்கு முன்னர் நாளாந்தம் 8 அல்லது 9 மரணங்கள் பதிவாகும்.
கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணிவரையில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 65 பேர் மரணித்துள்ளதாகவும் காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்