வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 397 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 397 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்.
இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 06 விமானப் பயணங்களை மேற்கொண்டு இவர்கள் அழைத்துவரப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தொிவித்துள்ளார்.
இவ்வாறு அழைத்துவரப்பட்டவர்களுள் சென்னையிலிருந்து 283 பேரும், துபாயிலிருந்து 48 பேரும் கட்டாாிலிருந்து 27 பேரும் இத்தாலியிலிருந்து 28 பேரும் அடங்குவர்.
இதேபோல் மேலும் 251 இலங்கையர்கள் நேற்று தொழில் நிமித்தம் துபாய் நோக்கி பயணமாகியுள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது.