நாடளாவிய ரீதியான திரையரங்குகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

நாடளாவிய ரீதியான திரையரங்குகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

இலங்கையில் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் திரையரங்குகளை திறக்க பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந்தார்.

கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதலின் கீழ் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்து சினிமா திரையரங்குகளும் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளளதுடன், சுகாதார வழிகாட்டுதல்களை அனைத்து பார்வையாளர்களும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.