வனாத்தவில்லு பகுதியில் உயிாிழந்த பறவைகளுக்கு பறவைக்காய்ச்சல் ஏற்படவில்லை!

வனாத்தவில்லு பகுதியில் உயிாிழந்த பறவைகளுக்கு பறவைக்காய்ச்சல் ஏற்படவில்லை!

வனாத்தவில்லு - எலுவான்குளம் - ரால்மடுவ வயல்நிலப் பகுதியில் உயிரிழந்த பறவைகளுக்கு பறவை காய்ச்சல் ஏற்படவில்லை என பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பறவைகளின் மரபணு மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்திய போது பறவை காய்ச்சலுக்கான அறிகுறிகள் இல்லை என வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால்நடை மருத்துவர் இசுரு கோட்டேகொட எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

குறித்த பகுதியில் வயல் நிலப்பகுதியில் கடந்த வாரத்தில் சுமார் ஆயிரம் பறவைகள் வரையில் உயிரிழந்தன.

நெல் குருவி உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் பறவைகள் உயிரிழந்தமைக்கான உறுதியான காரணம் இதுவரை அறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.