இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு!
வடகிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடையிடையே மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தொிவித்துள்ளது.
மேலும் சில பிரதேசங்களில் பிற்பகல் 1 மணியின் பின் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேற்கு மற்றும் சமபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அநேக பிரதேசங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழை வீழ்ச்சி ஏற்பபடக் கூடுமெனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையோடு தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து தற்காத்துக்கொள்ள உாிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.