மேலும் 174 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்..!

மேலும் 174 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்..!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 174 கைதிகள் பிணை மற்றும் விடுதலை அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் 155 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று விடுவிக்கப்பட்டவர்களில் 12 பெண் கைதிகளும் அடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இந்த மாதம் முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 9959 கைதிகள் பிணை மற்றும் விடுதலை அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.