ஒரு வகை பொருளுடன் படகொன்று கடற்படையினரால் முற்றுகை..!
காலி கடற்பரப்பில் போதை பொருள் என சந்தேகிக்கப்படும் ஒரு வகை பொருளுடன் படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடற்படை பேச்சாளர் இதனை எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.
இதன்போது குறித்த படகில் 5 பேர் இருந்ததாகவும் அவர்களில் ஒருவர் தப்பி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் குறித்த படகில் காணப்படும் போதை பொருளின் அளவை கணக்கிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.