மஹர சிறைச்சாலை சம்பவ அறிக்கை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது..!
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட உள்ளது.
நீதி அமைச்சர் அலி சப்ரி இந்த தகவலை வழங்கியுள்ளார்.
5 பேர் கொண்ட குழு ஒன்றினால் மஹர சிறை மோதல் சம்பவம் குறித்து ஆராயப்பட்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையானது நீதி அமைச்சரிடம் கடந்ததினம் கையளிக்கப்பட்டது.
இந்த அறிக்கையில் 13 முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த அறிக்கையை ஆராய்ந்து நீதி அமைச்சர் அதனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பித்து அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
மஹர சிறைச்சாலை மோதலில் 11 பேர் உயிரிழந்தனர்.
அவர்களில் 8 பேரின் சடலங்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தகனம் செய்யப்பட்டுள்ளன.
ஏனைய மூன்று பேரின் சடலங்கள் குறித்த மரண விசாரணை அறிக்கைகள் எதிர்வரும் நாட்களில் நீதிமன்றில் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.