11 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 16 பேருக்கு கொரோனா..!
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுபவர்களுக்கு 11 இடங்களில் மேற்கொள்ளப்படுகின்ற ரெப்பிட் எண்டிஜன் பரிசோதனையில் மேலும் 16 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
நேற்றைய தினம் 940 பேருக்கு இவ்வாறு ரெப்பிட் எண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
இதற்கமைய கடந்த 18 ஆம் திகதி முதல் இதுவரையில் 11 ஆயிரத்து 926 ரெப்பிட் எண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவர்களில் 90 பேருக்கு இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.