தேர்தல்கள் ஆணைக்குழுவின் எதிர்கால திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று

தேர்தல்கள் ஆணைக்குழுவின் எதிர்கால திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (31) 10 மணிக்கு கூடவுள்ளது.

ஆணைக்குழுவின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்தல் தொடர்பில் இன்றைய தினம் கவனம் செலுத்தப்படவுள்ளது.

புதிய கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகளை ஜனவரி முதல் மீள ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்ட தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், ஆணைக்குழுவின் இரண்டாவது கூட்டம் இதுவாகும்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவாவை நியமிப்பதற்கு பாராளுமன்ற குழு அனுமதி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

M.M. மொஹம்மட், குணபால விக்ரமகே, ஜீவன் தியாகராஜா, K.P.P. பத்திரண ஆகியோர் அதன் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.