நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீப்பரவலானது, திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது அல்ல..!
கொழும்பு - புதுக்கடை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீப்பரவலானது, திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயல் என்பதற்கான சாட்சிகள் இல்லை என தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குழு இதனை தெரிவித்துள்ளது.
கடந்த 15 ஆம் திகதி இந்த தீப்பரவல் ஏற்பட்டிருந்த நிலையில் பின்னர் விசாரணைக்கு குழு சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
இந்த தீ அனர்த்தம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.