மஹர சிறைச்சாலை சம்பவ அறிக்கை நீதி அமைச்சருக்கு சமர்ப்பிப்பு..!

மஹர சிறைச்சாலை சம்பவ அறிக்கை நீதி அமைச்சருக்கு சமர்ப்பிப்பு..!

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழுவின் அறிக்கை நீதி அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கைக்குள் 13 பரிந்துறைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் மரணித்த மேலும் 4 கைதிகளின் சரீரங்களை தகனம் செய்யுமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு வத்தளை நீதவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நான்கு சரீரங்களில் மூவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 11 பேர் மரணித்தனர்.

இந்தநிலையில் எஞ்சியுள்ள மூன்று சரீரங்கள் மீதான உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.