கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 698 பேர் குணமடைந்துள்ளனர்..!

கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 698 பேர் குணமடைந்துள்ளனர்..!

நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 698 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்துள்ளது.

தொற்று நோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து இதுவரையில் 34623 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் இதுவரையில் 42063 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் தொற்றுறுதியான 7,245 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.