
நீங்கள் கொழும்பில் வசிப்பவரா - அதிகரிக்கும் கொரோனா தொற்று..!
நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 460 கொவிட்-19 நோயாளர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 249 கொரோனா நோயாளர்கள் பதிவானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 52 பேரும், கண்டி மாவட்டத்தில் 38 பேரும், காலி மாவட்டத்தில் 29 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 16 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் 14 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 11 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 10 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 06 பேரும் பதிவாகியுள்ளனர்.
அனுராதபுரம் மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தலா 5 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 4 பேரும், பொலனறுவை மாவட்டத்தில் 3 பேரும், நுவரெலியா, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் தலா 2 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.
பதுளை, கேகாலை, திருகோணமலை, மாத்தளை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது