11 இடங்களில் ரெபிட் எண்டிஜன் பரிசோதனைகள் - 74 பேருக்கு கொரோனா...!
மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு பயணிக்கும் பொது மக்களுக்கு ரெபிட் எண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், நேற்றைய தினம் 13 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு செல்கின்றவர்களுக்கு 11 இடங்களில் ரெபிட் எண்டிஜன் பரிசோதனைகள் கடந்த 18 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குறித்த தினத்திலிருந்து இதுவரையிலான காலப்பகுதியில் 74 பேருக்கு கொரோனா தொற்று காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.