எரிபொருள் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரி நீக்கம்
டீசல் மற்றும் றெ்றோல் மீது விதிக்கப்பட்டிருந்த 26 ரூபா அதிகவரி நீக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் உலக சந்தையில் எரிபொருள் விலையின் அதிகரிப்பே குறித்த வரி நீக்கத்திற்கு காரணம் என அவர் தெரிவித்தார்.
இவ்வாறு உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்திருந்தாலும், அதிகவரியை நீக்குவதன் ஊடாக இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படாது எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு கூடுதல்வரி நீக்கப்படுவதன் காரணமாக பெற்றோல் லீட்டர் ஒன்றிற்காக ஏற்பட்டுள்ள இழப்பு 35 ரூபாவை விட அதிரிப்பதோடு, டீசலிற்கான இழப்பு 25 ரூபாவை கடந்து செல்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.