பொதுமக்கள் எந்த விதத்திலும் அச்சமடையத் தேவையில்லை
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டை திறப்பது தொடர்பில் பொதுமக்கள் எந்த விதத்திலும் அச்சமடையத் தேவையில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
மத்தள சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகள் பூரண சுகாதார வழிமுறைகளுக்கு அமையவே நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
30 லட்சத்திற்கும் அதிகமானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுற்றுலாத் தொழில்துறையை நம்பி, தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.