கொவிட்-19 காரணமாக மரணிப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பு!
கொவிட்-19 காரணமாக மரணிப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் மரணிப்பவர்களின் சரீரங்களை தகனம் செய்வதா? அல்லது அடக்கம் செய்வதா? என்பது தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
பேராசிரியர் ஜெனீஃபர் பெரேராவின் உள்ளிட்ட 9 பேர் அடங்களாக குறித்த குழு நியமிக்கப்பட்டது.
இந்தநிலையில் குறித்த குழுவின் அறிக்கை சுகாதார அமைச்சுக்கு நேற்று கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.